இரசாயன உர இறக்குமதி - விவசாய அமைச்சர் மற்றும் செயலாளரிடையே வெடித்தது முரண்பாடு?
Mahindananda Aluthgamage
fertilizers
Prof. Udit K. Jayasinghe
By Sumithiran
இரசாயன உர இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அமைச்சின் செயலாளர் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்கான இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
எனினும், உரிய தரத்திலான இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க(Prof. Udit K. Jayasinghe), இன்று முற்பகல் செய்திச் சேவை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதனை நிராகரிக்கும் வகையில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.