மீண்டும் எரிபொருளில் விலைமாற்றமா?? அமைச்சர் வெளியிட்ட தகவல்
People
Uthaya Gammanpila
Gotabaya Rajapaksa
SLPP
By Chanakyan
நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சரும்அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில (Uthaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இச்கூட்டத்தின் போது வரவு செலவு திட்டம் மற்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் மேலும் குறி்ப்பிட்டள்ளார்.
கடந்த சில தினங்களிற்கு முன்னர் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டன, இந்நிலையில் மீண்டும் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.