அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?வெளிவந்த புதிய தகவல்
colombo
rice
port
shortage
By Sumithiran
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றை விடுவிப்பதற்கான டொலர்களை செலுத்த முடியாமல் துறைமுகத்தில் முடங்கியுள்ளதாக தொழிற்சங்க பேச்சாளர் நிஹால் செனவிரத்ன(Nihal Seneviratne) தெரிவித்தார்.
அந்த கொள்கலன்களில் சம்பா, நாடு, பொன்னி சம்பா, கச்சா அரிசி உள்ளிட்ட 10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி உள்ளதாக அவர் கூறினார்.
தற்போது இறக்குமதியாளர்கள் வசம் உள்ள அரிசி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் எனவும், இறக்குமதியாளர்களின் கைகளில் மேலதிக அரிசி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி