இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (10.08.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.
இஷாரா செவ்வந்தி
இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் . இதன்போது அவரை ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |