காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவ்வந்தி நீண்ட காலமாக தலைமறைவில் இருந்து வந்தார்.
பாதாள உலகக் கும்பல் கைது
இஷாரா செவ்வந்தியை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்த போதிலும். காவல்துறையினரால் கைது செய்ய முடியாது இருந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் நேபாள காவல்துறை இணைந்து சந்தேகநபரான செவ்வந்தியை கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் நேபாளத்தில் நடத்திய சோதனையில் இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டது.
நேபாள காவல்துறை மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் உதவியுடன் சென்ற ரோஹன் ஒலுகல, நேற்று முன்தினம் இரவு இந்த குற்றவாளிகளை கைது செய்தார்.
கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இஷார செவ்வந்தியின் மறைவிடத்தை காவல்துறையினரால் அடையாளம் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்வதற்காக செவ்வந்திக்கு ஜே.கே.பாய் உதவி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர் மூலமாகவே செவ்வந்திக்கு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில்
இந்நிலையில் கைதின் பின்னர், பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல எந்த நேரத்திலும் தன்னை கைது செய்வார் என அறிந்திருந்ததாக இஷார செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்.
7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போதும், வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு அதிரடி படையின் நடவடிக்கையின் காரணமாக நேற்றையதினம் நேபாளத்தில் வைத்து இஷாரா கைது செய்யப்பட்ட போது, இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (15) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
