ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது உறுதி - உண்மையை வெளிப்படுத்திய பேச்சாளர்!
ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி போர் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
இறைவனின் எதிரிகளுடனான போரின் போதே அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி (abu al-hasan al-hashimi al-qurashi) கொல்லப்பட்டதாக ஐ.எஸ். இயக்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் எதுவும் அவரால் வெளியிடப்படவில்லை. அதேசமயம், சிரியாவின் தென் பகுதியிலுள்ள தாரா மாகாணத்தில், ஒக்டோபர் நடுப்பகுதியில் நடந்த சுதந்திர சிரிய இராணுவ கிளர்ச்சியாளார்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியக பிரிவு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர்
முன்னாள் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்ததாக கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் சிரிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபு இப்ராஹிம் அல் குரேஷி சிரியாவில் வட பகுதியிலுள்ள இட்லிப் மாகாணத்தில் கடந்த மாசி மாதத்தில் அமெரிக்க இராணுவ தாக்குதலில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அபு இப்ராஹிம் அல் குரேஷிக்கு முன்னர் தலைவராக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதி 2019 ஒக்டோபர் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)