அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள்

Go Home Gota TNA Sajith Premadasa May Day Sri Lanka Podujana Peramuna
By Kiruththikan May 01, 2022 02:06 AM GMT
Report

 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் கூட்டம் கட்சி தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்குபற்றலின்றி இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் மே தின கூட்டம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. மே தின கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த பொதுஜன பெரமுனவினர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தனர். எனினும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் காலி முகத்திடலை கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆக்கிரமித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே கூட்டத்தை நுகேகொடையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுகேகொடையில் இடம்பெறும் மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கலந்துக்கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மாத்திரம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை 08.30 மணியளவில் புதுக்கடையில் உள்ள முன்னாள் அரச தலைவர் மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவு கூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 க்கு கொழும்பு - கெம்பல் மைதானத்திலிருந்து (கெம்பல் பார்க்) பேரணியாக சுதந்திர சதுக்கத்திற்கு சென்று அங்கு பிரதான கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்றைய தினம் 4 பிரதான நகரங்களில் மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதற்கமைய காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்திலும், மாலை 03 மணிக்கு கொழும்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொழும்பு மாளிகாவத்தையில் இருந்து பேரணியை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கு பிரதான கூட்டத்தை நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மே தின கூட்டத்தை நடத்தவில்லை. காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் கறுப்பு கொடிகளை ஏற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

மே தினத்தை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து பொலன்னறுவை சிடி சென்டர் நிலையத்திலிருந்து,பொலன்னறுவை வைத்தியசாலை வரை பேரணியாக செல்லவுள்ளார். சுதந்திர கட்சியின் மாவட்ட உறுப்பினர்களுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமான சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இடதுசாரி கட்சிகள்

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் இன்று பகல் ஹைட் - பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் இன்று பகல் பத்தரமுல்லயில் உள்ள அபேகமவில் மே தின விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

மே தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தமிழ் தேசிய மேதின கூட்டம் இன்று பகல் 2 மணிக்கு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் இடம்பெறவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026