பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம் -அரசுக்கு கடும் எச்சரிக்கை
பாடசாலைகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) நேற்று (29) தெரிவித்தார்.
அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு திறக்கப்படும் போது பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்திருந்தாலும், அவர்கள் எங்களுடன் இது குறித்து கலந்துரையாடவில்லை.
எனவே, பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் கற்பிப்பதற்காக பாடசாலைகளுக்கு செல்லப்போவதில்லை. எனவே ஆசிரியர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.