யாழ்ப்பாணம் உட்பட 3 மாவட்டங்களில் பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!
sri lanka
jaffna
people
By Shalini
நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி
சுதுகும்பல மேற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வெலமத பரகம பிரிவு
நுவரெலியா
டன்சினன் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மத்திய பகுதி
யாழ்ப்பாணம்
காரை நகர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கல்லித்தெரு
காரை நகர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கலவன்தாலவ பிரிவு
1ம் ஆண்டு நினைவஞ்சலி