அதிகரிக்கும் கொரோனா - முடக்கப்படுமா நாடு? அலரிமாளிகையில் நடந்த முக்கிய கூட்டம்
isolation
corona
meeting
basilrajapaksha
By Sumithiran
தற்போதுள்ள COVID-19 நிலைமையை அடுத்து 75% முழுமையாக அல்லது பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இன்று (09) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக உள்ளார்.
அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஊரடங்கு உத்தரவு அல்ல, பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தகைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு தொடர்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்