பயணக்கட்டுப்பாடுகள் இதற்கு பொருந்தாது - இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
srilanka
isolation
shavendrasilva
essential
By Jaso
இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொருந்தாது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நேற்றையதினம் (10) மே 30 வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது.
அதன்படி, அத்தியாவசிய சேவைகள் எவ்வாறு செயற்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்