முற்றாக போர் நிறுத்தத்தை மறுத்த அமெரிக்கா
உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி முன்னைவைக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று(30) இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அதனை குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்கு முன்னெடுக்கும் போது தாக்குதலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கலாம் என கிர்பி மேலும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம்
கடந்த 25 நாட்களாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடம்பெற்று வருகிறது, இதில் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 9000 ஐ கடந்துள்ளது.
அத்தோடு, காசாவின் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் படைகளை ஒடுக்காமல் போர் நிறுத்தம் என்பது இல்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போர் நிறுத்தம் என்றால் இஸ்ரேல் ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திற்கு சரணடைய வேண்டும்.இது நடக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா போர் நிறுத்த கோரிக்கை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
