இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை!
இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரையிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
ஆயிர்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் நேற்றைய தினம்(22)புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உறவின் அழிவு
மேலும்,இப்போரால் தான் மிகவும் கவலையும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் துன்பப்படுபவர்கள், பணயக்கைதிகள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருடனும் செபத்தில் ஒன்றித்திருத்திருக்கின்றேன்
உக்ரைன் உட்பட உலகில் நிகழும் எல்லாப் போர்களைக் குறித்தும் தான் நினைவுகூர்வதாகவும், போர் என்பது எப்போதும் தோல்வியைத்தான் தரும். அது மனித உடன்பிறந்த உறவின் அழிவு. என்று சுட்டிக்காட்டினார்.
எனவே தயவுகூர்ந்து இப்போரினை நிறுத்துங்கள்,என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் 27, வரும் வெள்ளியன்று உண்ணாநோன்பு, இறைவேண்டல் மற்றும் ஒறுத்தல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேநாளில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு, நம் உலகில் அமைதி நிலவவேண்டி ஒரு மணி நேரம் செப வழிபாடு நடைபெறும் என்றும் கூறினார்.