சிரியா எல்லையில் நிலவும் அமைதி: அடுத்த தாக்குதலுக்கு தயாராகிறதா ஹிஸ்புல்லா அமைப்பு
லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறதாகவும் எனினும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கக்கூடும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இன்று 5ம் நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
அதேவேளை, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை 900 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம்
மேலும், இஸ்ரேல் காசா எல்லையில் 3 லட்சம் வீரர்கள் மற்றும் இராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை குவித்துள்ளனர்.

இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகிவருகின்றது. இந்நிலையில், லெபனான், சிரியா எல்லையில் அமைதி நிலவுகிறது எனவும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.