தொடரும் இஸ்ரேல் யுத்தம்: பிரபல ஊடகமொன்றின் செய்தியாளர்கள் துப்பாக்கி முனையில் விசாரணை
பி.பி.சி. அரேபிய செய்தியாளர் குழுவை இஸ்ரேல் காவல்துறையினர் தாக்கியதோடு துப்பாக்கி முனையில் விசாரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை படமெடுக்க முயற்சித்த போது, அவர்களின் தொலைபேசி தரையில் வீசப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
துப்பாக்கி முனையில் விசாரணை
இதன்போது, காரில் சென்று கொண்டிருந்த பி.பி.சி. அரேபிய செய்தியாளர் குழுவை இடைமறித்து காரில் இருந்தவர்களை இஸ்ரேல் காவல்துறையினர் தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் விசாரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நாங்கள் பெரும் படையுடன் தாக்கப் போகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.