ஹார்முஸ் நீரிணை முடக்கம்: பொருளாதாரப் போராக மாறும் மத்திய கிழக்கு மோதல்
பல தசாப்தங்களாக நிழற்போராக இருந்த இஸ்ரேல் - ஈரான் மோதல், கடந்த பெப்ரவரி தாக்குதலுக்குப் பிறகு இப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் போராக மாறியுள்ளது.
இதில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பிந்தைய அதிகார மாற்றம், பிராந்தியத்தின் பாதுகாப்பு சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது.
தொடர்ச்சியாக ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் மற்றும் கப்பல் போக்குவரத்து முடக்கம், மத்திய கிழக்கின் மோதலை ஒரு உலகளாவிய பொருளாதாரப் போராக உருவெடுக்கச் செய்துள்ளது.
அத்தோடு, வளைகுடா நாடுகள் (சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை) தங்களின் பொருளாதார நலன்களுக்கும், பிராந்தியப் பாதுகாப்புக்கும் இடையே ஒரு கடுமையான அரசியல் இக்கட்டில் சிக்கியுள்ளன.
இது குறித்தும் அண்மைய சர்வதேச அரசியல் மற்றும் உள்நாட்டு அரசியல் ஆகியவற்றின் நிலவரம் குறித்தும் ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |