இஸ்ரேலின் தாமதம்: அரசியல் சூதாட்டத்தினை நடத்துகிறார் நெதன்யாகு
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியல் சூதாட்டத்தினை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரானினால் ஏவப்பட்ட ஏவுகணைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், சுமார் 60 தொன் வெடிபொருட்கள் இருந்ததாகவும் சில ஏவுகணைகள் காரை விட பெரியளவில் இருந்ததாகவும் செய்திகளும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சில ஏவுகணைகள் ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதனை ஈராக்கின் பிரதமர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தவிரவும், அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள் ஈரான் மீதான பதில் தாக்குதல் நடத்துவதில் நிதானம் காக்குமாறு கூறியுள்ள நிலையில், நட்புநாடுகளின் உதவியை இழக்க விரும்பாமலும், தனிமைப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் ஈரான் மீதான பதில் தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் காண்க.