தெற்கு சிரியாவிற்குள் புதிய நகர்வு! அதிரடி ஊடுருவல்களைத் தொடங்கிய இஸ்ரேல்
இஸ்ரேலியப் படைகள் தெற்கு சிரியாவிற்குள் புதிய ஊடுருவல்களை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் குனைத்ரா மற்றும் டெரா மாகாணங்களின் சில பகுதிகளுக்குள் நுழைந்து, தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து, பொதுமக்களையும் வாகனங்களையும் சோதனையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
குனைத்ரா மாகாணத்தில் உள்ள சைதா அல்-கோலான் மற்றும் அல்-பசாலி பண்ணையை இணைக்கும் வீதிகளில் இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் நகர்ந்ததாகவும், அங்கு வீரர்கள் பல மணி நேரம் வழிப்போக்கர்களை நிறுத்தி சோதனையிட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சோதனைச் சாவடி
மேற்கு டெராவின் யர்மூக் படுகைப் பகுதியில் உள்ள மரியா நகரின் கிழக்கு நுழைவாயிலில் இஸ்ரேலியப் படைகள் ஒரு சோதனைச் சாவடியை அமைத்து, அப்பகுதி வழியாகப் பயணிக்கும் தனியார் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் குடியிருப்பாளர்களைச் சோதனையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 150 வீரர்களை ஏற்றிச் சென்ற நான்கு இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நகருக்குள் நுழைந்து, உள்ளூர் தொலைபேசி நிலையத்திற்கு அருகில் ஒரு சோதனைச் சாவடியை அமைத்ததாக மாரியா மாகாண மேயர் முவஃபக் மஹ்மூத் தெரிவித்ததாக ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.
துருப்புக்கள் வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிட்ட பின்னர், யாரையும் கைது செய்யாமல் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |