மத்தியகிழக்கில் இஸ்ரேல் திறந்துள்ள புதிய வான்வழிப் பாதை!!
ஈரான் மீதான இஸ்ரேலின் பிரதான தாக்குதல் என்பது நிச்சயமாக வான் வழியாகத்தான் இருக்கும் என்றுதான் கூறுகின்றார்கள் போரியல் நோக்கர்கள்.
ஈரான் மீது இஸ்ரேல் வான் வழியாகத் தாக்குதல் நடாத்தவேண்டுமானால், அதற்கு ராடர்களினால் இலகுவில் கண்டுபிடிக்கமுடியாத அதிநவீன F-35 ‘ஸ்டெல்த்’ ரக விமானங்களினால் மாத்திரம்தான் சாத்தியம்.
இஸ்ரேலில் இருந்து F-35 விமானங்கள் புறப்பட்டு ஈரான் சென்று தாக்குதல் நடாத்தவேண்டுமானால், சுமார் 3000 கி.மீ. தூரம் அவை பயணம் செய்தாகவேண்டும்.
ஈரானில் தாக்குதல் நடாத்திவிட்டு மறுபடியும் அவை அதே அளவு தூரம் பயணம்செய்துதான் இஸ்ரேலிலுள்ள தளங்களுக்குத் திரும்பியாகவேண்டும்.
வெறும் 2000 கி.மீ.தூரம் பயனிப்பதற்கு மாத்திரமே எரிபொருட் கொள்ளவு வசதிகொண்ட இந்த F-35 விமானங்களினால், இஸ்ரேலில் இருந்து புறப்பட்டு ஈரான் சென்று தாக்குதல் நடாத்துவதும், தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் திரும்பிவருவதும் முடியவே முடியாத காரியம்.
இப்படி இருக்கையில், இஸ்ரேலிய யுத்த விமானங்கள் இஸ்ரேலில் இருந்து ஈரான் நோக்கி பயணிப்பதற்கான புதிய வான்வழிப் பாதை ஒன்றை உருவாக்கியுள்ளது இஸ்ரேலிய வான்படை.
அந்த புதிய வான்வழிப்பாதை பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழச்சி: