வெனிசுலா விவகாரம் : ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்மை தொடர்பில் ஈரான் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தால் உலகை அச்சுறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்
சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலும் ஈரானும் மோதலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரானிய அணுசக்தி இலக்குகளைத் தாக்கி அவற்றை அழிப்பதன் மூலம் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவியது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை பல ஆண்டுகளாக பின்னுக்குத் தள்ளியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஈரானில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரானிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
ரஷ்யாவிற்கு தப்பியோட ஈரான் உச்ச தலைவர் முயற்சி
போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் ஈரான் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தாம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்திருந்தார்.

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தால் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ரஷ்யாவிற்கு தப்பிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவும் ஈரானும் நெருங்கிய நட்பைக் கொண்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |