பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

United States of America Israel Iran World Iran-Israel War
By Thulsi Jun 16, 2025 07:29 AM GMT
Report

புதிய இணைப்பு

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் இரண்டு பெண்கள், 70 மற்றும் 80 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் வடக்கு நகரமான ஹைஃபாவில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  காயமடைந்த 87 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் அவசர சேவையை மேற்கோள் காட்டி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

ஆறாம் இணைப்பு

இஸ்ரேல் (Israel) தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவும் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள உரிமையை கனடா மீண்டும் வலியுறுத்துகின்றது என கனடா பிரதமர் மார்க் கார்னி ( Mark Carney) தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

கனடா (Canada) பிரதமர் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈரானின் அணுசக்தித் திட்டம் நீண்ட காலமாகவே பெரும் கவலையை ஏற்படுத்திய ஒன்று.

ராஜதந்திர ரீதியான தீர்வு

இப்போது, இஸ்ரேல் முழுவதும் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல், பிராந்திய அமைதிக்கே நேரடி அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் உருவாகும் சூழ்நிலையை மதிப்பீடு செய்ய கனடாவின் தேசிய பாதுகாப்பு பேரவை அவசரமாக கூட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உள்ளது என்பதை கனடா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்புகளும் மிகுந்த ஒழுங்கும், பொறுப்பும் காட்ட வேண்டும். ராஜதந்திர ரீதியான தீர்வுக்காக முன்னேற வேண்டும்,” என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐந்தாம் இணைப்பு

ஈரான் (Iran) மீது இஸ்ரேலின் operation Rising Lion வான்வழித் தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்ததுடன் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் (Iran) இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.

ஈரான் சிவப்புக் கொடி

இந்நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வகையில், கோமில் உள்ள ஜம்கரன் மசூதியில் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

இச்சிவப்புக் கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.

நான்காம் இணைப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு ஈரானிய (Iran) அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்றாம் இணைப்பு

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய போதே அயத்துல்லா அலி கமேனி (Seyyed Ali Hosseini Khameneh) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் பல இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதை அவர் உறுதிப்பிடுத்தி உள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.  

இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி (Hossein Salam) இஸ்ரேலிய (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் பதற்றம் - ஈரானின் அச்சமிகு 24 மணித்தியாலங்கள்

அதிகரிக்கும் பதற்றம் - ஈரானின் அச்சமிகு 24 மணித்தியாலங்கள்

கடுமையான பதிலடி

இதேவேளை, நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Israel Strikes Iran Nuclear Sites Military Bases

இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ''கடுமையான பதிலடி'' கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  


அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016