காசா நகரை அழிப்போம் - இஸ்ரேல் எச்சரிக்கை
ஹமாஸின் தலைநகரமான காசா (Gaza) அழிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் காரணமாக காசாவில் முதல்முறையாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு அமைப்பு (The Integrated Food Security Phase Classification (IPC) ) தெரிவித்துள்ளது.
காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பஞ்சம் நிலவி வருவதாகவும், அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பட்டினி மற்றும் மரணம்
டெயின் அல் பலா மற்றும் கான் யூனிஸ் நகரிலும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பஞ்சம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

காசாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமை, பட்டினி மற்றும் மரணம் என்ற அபாய நிலையில் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதக்குறைப்புக்கு முன்வராவிட்டால் ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |