வடக்கு காசா மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
இஸ்ரேல்(israel) மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள(northern gaza) பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளான ஒர் ஹானெர், இபிம் மற்றும் கெவிம் ஆகிய இடங்களின் மீதும் இன்று (எப்.1) காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனை தாங்கள் தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவப் படைகள் தெரிவித்துள்ளது.மேலும், அப்பகுதி முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவ அராபிய செய்தித் தொடர்பாளரின் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, காஸாவின் வடக்குப் பகுதிகளிலுள்ள பெயித் ஹனோன், பெயித் லஹியா மற்றும் ஷேக் ஜயித் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி காஸா நகரத்திலுள்ள கூடாரங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவப் படையின் அரேபிய செய்தி தொடர்பாளர் அவிசய் அட்ராயி தெரிவித்துள்ளார்.
#عاجل ‼️ إلى جميع سكان قطاع غزة المتواجدين في مناطق بيت حانون، مشروع بيت لاهيا، الشيخ زايد وأحياء المنشية وتل الزعتر
— افيخاي ادرعي (@AvichayAdraee) April 1, 2025
🔴هذا انذار مسبق وأخير قبل الغارة!🔴
⭕️تعود المنظمات الإرهابية وتطلق قذائفها الصاروخية من بين المدنيين.
⭕️لقد حذرنا هذه المنطقة مرات عديدة.
⭕️من أجل سلامتكم عليكم… pic.twitter.com/RMx3LKCz68
இது தான் கடைசி எச்சரிக்கை
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலுக்கு முன்பு இது தான் கடைசி எச்சரிக்கை என்றும் தீவிரவாத அமைப்புகள் மக்கள் குடியிருப்பிலிருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

