இஸ்ரேலை அடியோடு அழிக்க திட்டம்: ஈரானின் பகிரங்க அறிவிப்பு
இஸ்ரேல்(israel) - ஈரான்(iran) இடையே அணையாத தீ பிழம்பாக போர் பதற்றம் நிலவும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து அழிப்பதோடு இஸ்ரேலை மொத்தமாக சிதைப்பதற்குரிய திட்டத்தை வகுத்துள்ளோம் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஈரானிய இராணுவத்தளபதி இப்ராஹிம் ஜபாரி அறிவித்துள்ளார்.
இஸ்ரேலை தாக்க திட்டம்
இது தொடர்பில் இராணுவத் தளபதி இப்ராஹிம் ஜபாரி கூறியதாவது, “சரியான நேரத்தில் இஸ்ரேலை தாக்க உள்ளோம். இதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளோம்.
இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை அழிக்க இந்த திட்டம் கைக்கொடுக்கும்'' எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் - ஈரான் இடையே பெரிய போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் கொடுத்த பதிலடி
இதற்கு இஸ்ரேலும் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்ததாவது,“யூதர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் தன்மை கொண்டவர்கள்.
நம்மை அழிப்பது தான் குறிக்கோள் என்று எதிரி கூறினால் அதை நம்ப வேண்டும். இதனை வரலாற்றில் இருந்து யூத மக்களான நாங்கள் கற்று கொண்டுள்ளோம்.
எனவே ஈரானை திருப்பி அடிக்க நாங்களும் தயார் தான்'' என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது ஈரான் தொடர்ச்சியாக தனது படைபலம் குறித்த காணொளிகளை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 6 மணி நேரம் முன்
