லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்கள் பலி (படம்)
தெற்கு லெபனானில் உள்ள Tayr Harfa மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு லெபனான் ஊடகவியலாளர்களும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாக அல்-மயாதீன் செய்தி வலையமைப்பு தெரிவித்துள்ளது.
அல்-மயாதீன் நிருபர், ஃபரா ஓமர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரபிஹ் அல்-மெமரி ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
நேரடி ஒளிபரப்பை முடித்த கையுடன் தாக்குதல்
இவர்கள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலைவேளை இஸ்ரேலிய போர் விமானம் இரண்டு ரொக்கெட்டுகளை அவர்களது இருப்பிடத்தில் வீசியதில் கொல்லப்பட்டனர்.
LEBANESE NATIONAL NEW AGENCY: Three citizens, two journalists and a civilian, were killed in an Israeli bombing of the Tayr Harfa al-Jebin triangle.
— The Palestine Chronicle (@PalestineChron) November 21, 2023
FOLLOW OUR LIVE BLOG: https://t.co/EWyzXaTflT pic.twitter.com/EV3fxG1if1
தெற்கு லெபனானில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கிய உமர் மற்றும் அல்-மெமரி காலை 10 மணிக்கு தங்களது நேரடி ஒளிபரப்பை முடித்தனர்.
இதுதான் முதல் முறையல்ல
அவர்கள் தங்கள் ஒளிபரப்பை முடித்தநிலையில் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.
Journalist Ayat Al-Khadour documents the last moments of her life in Beit Lahia in the northern #Gaza Strip, before being killed along with her entire family in an Israeli airstrike. This was the last video she posted on her Instagram account. pic.twitter.com/aahitpnKPp
— The Palestine Chronicle (@PalestineChron) November 21, 2023
லெபனான் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் குறிவைப்பது இதுதான் முதல் முறையல்ல என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |