காசாவில் மரண ஓலம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் உட்பட பலர் பலி
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரே குடும்பதைச் சேரந்த 36 பேர் உட்பட குறைந்தது 80 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
காசா நகரில் அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்திற்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் ஏழு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பலர் உயிரிழந்ததுடன் மற்றும் பலர் காயமடைந்தனர் என அதிகாரபூர்வ பலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
பலர் பலி, டசின் கணக்கானோர் படுகாயம்
இதற்கிடையில், காசா நகரில் அல்-ஜலா தெருவில் உள்ள குடியிருப்பு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில் டசின் கணக்கானோர் உயிரிழந்தனர். காசா நகரில் அல்-துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
PALESTINIAN MEDIA: Israeli warplanes launched a series of raids north of the Nuseirat camp in the central Gaza Strip.
— The Palestine Chronicle (@PalestineChron) March 16, 2024
?⚠️36 Members of the Tabatbi family were killed by an Israeli air strike that bombed a 4-story building in the Nusairat refugee camp, in central Gaza.
FOLLOW… pic.twitter.com/0lY7uR1zSI
மற்றொரு நகரத்தில் உள்ள அல்-நஸ்ர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாககுதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயங்களுக்கு ஆளாகினர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 36
மேலும், இஸ்ரேலிய இராணுவத்தின் பீரங்கி மத்திய காசாவில் உள்ள நுசிராத் முகாமில் இரண்டு வீடுகளை குறிவைத்தது, இதன் விளைவாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 36 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில், மக்கள் வசிக்கும் வீட்டின் மீது குண்டுவீசித் தாக்கியதில், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர்.
காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 31,490 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 73,439 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், குறைந்தது 7,000 பேர் கணக்கில் வரவில்லை, அவர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |