பரபரப்பின் உச்சக்கட்டத்தில் மோதல்! இஸ்ரேல் எடுத்துள்ள முடிவு
இஸ்ரேல் இராணுவம் உடனடியாக தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி ஹமாஸை அழிக்கும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அத்தோடு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு காசா பகுதியில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவசர நிலை பிரகடனம்
இஸ்ரேல் காஸாவை "அழிவுகளின் நகரமாக" மாற்றும் என்றும் அவர் கூறினார்.
‼️ Netanyahu: "The Israeli army will immediately use its full power to destroy Hamas"
— NEXTA (@nexta_tv) October 7, 2023
The Israeli Prime Minister called on the residents of the Gaza Strip to immediately leave the occupied territory. He said that Israel would avenge this "black day" and turn Gaza into a "city of… pic.twitter.com/UD6jvSshZO
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் கடினமாக இருக்கும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் சூளுரை
இதேவேளை, அடுத்த 50 ஆண்டுகளுக்கான காசாவின் யாதார்த்தத்தை மாற்றியமைப்போம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சூளுரைத்துள்ளார்.
We will change reality on the ground in Gaza for the next 50 years.
— Visegrád 24 (@visegrad24) October 7, 2023
What was before, will be no more.
We will operate at full force,”
says Israeli Minister of Defense Yoav Gallant. ??
முன்பு என்ன இருந்ததோ, அது இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாங்கள் முழுப் பலத்துடன் செயற்பட உள்ளோம் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 7, 2023
Israel's Defense Minister Yoav Gallant:
"What has been, is not what will be. We will change the face of reality in Gaza"
Sounds like a ground offensive in Gaza and subsequent re-occupation of the area is imminent.
Israel withdraw from Gaza in 2005 pic.twitter.com/828zfH0o3S