காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை: முற்றாக நிராகரித்த இஸ்ரேலிய தரப்பு

Benjamin Netanyahu United States of America Israel Egypt
By Aadhithya Aug 09, 2024 11:55 PM GMT
Report

காசாவில் (Gaza) போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Minister Bezalel) நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், போர்நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க  அமெரிக்கா (USA), கத்தார் (Qatar) மற்றும் எகிப்து (Egypt) உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் சமீபத்தில் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இதனை நிராகரித்து இஸ்ரேலிய நிதி அமைச்சர் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ஹமாஸின் (Hamas) அழிவுக்கு முன் போர் நிறுத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சரணடைதல் ஒப்பந்தத்திற்கான நேரம் இது இல்லை.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு

பிரதமர் நெதன்யாகு

பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆனால் யூதர்களைக் கொன்ற கேவலமான மக்களை விடுவிக்க இன்னும் நேரம் வரவில்லை ” என தெரிவித்துள்ளார்.

காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை: முற்றாக நிராகரித்த இஸ்ரேலிய தரப்பு | Israeli Finance Minister Rejects Cease Fire Talks

குறிப்பாக பிரதமர் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) இந்த வலையில் விழ வேண்டாமென வலியுறுத்தியள்ளதாகவும் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கான அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து : அதிகரித்துள்ள பதற்றம்

இஸ்ரேலுக்கான அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து : அதிகரித்துள்ள பதற்றம்

மறைமுகப் பேச்சுவார்த்தை

பல மாதங்களாக, எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை: முற்றாக நிராகரித்த இஸ்ரேலிய தரப்பு | Israeli Finance Minister Rejects Cease Fire Talks

ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவில் இருந்து படைகளைத் திரும்பவும், அகதியான பலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்கு திரும்ப அனுமதிக்கவும், ஹமாஸ் விடுத்த கோரிக்கைகளை இஸ்ரேல் நிறைவேற்ற மறுத்ததால் இதுவரை எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

தெஹ்ரானில் ஹமாஸ்  தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகையால், இது இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு பேரிடியாக அமையும் கண்டுபிடிப்பு: ஈரான் களமிறக்கிய அதிநவீன ஏவுகணை

இஸ்ரேலுக்கு பேரிடியாக அமையும் கண்டுபிடிப்பு: ஈரான் களமிறக்கிய அதிநவீன ஏவுகணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024