காசாவில் கொடூரம் : மருத்துவமனையை எரித்த இஸ்ரேல் படை : அவசரமாக வெளியேற்றப்படும் நோயாளர்கள்
காசாவின்(gaza) வடக்கு பகுதியில் அமைந்துள்ள கமால் அத்வான் மருத்துவமனையை இஸ்ரேலியப்(israel) படைகள் எரித்தள்ளதாகவும் அங்கிருந்த டசின் கணக்கான நோயாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் முனீர் அல் பர்ஷ், 'இஸ்ரேல் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து அதை தீயிட்டு எரித்து வருகிறது' என குற்றம் சாட்டி உள்ளார்.
முக்கிய பகுதிகளுக்கு தீ வைப்பு
இஸ்ரேலியப் படைகள் அறுவை சிகிச்சைபகுதி, ஆய்வகம் மற்றும் ஒரு களஞ்சியசாலைக்கு தீ வைத்ததாக அவர் கூறினார்.
பணிப்பாளர்,பணியாளர்கள் தடுத்து வைப்பு
இதனிடையே மருத்துவமனையின் பணிப்பாளரை டசின் கணக்கான மருத்துவ ஊழியர்களுடன் இஸ்ரேல் படையினர் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலால் மருத்துவமனை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது. அந்த மருத்துவமனை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளமாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதேவேளை காஸாவின் மற்ற இடங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |