ஹிஸ்புல்லாவின் முக்கிய இரண்டு புள்ளிகளை சாய்த்தது இஸ்ரேல்!
Israel
Middle East
Lebanon
Iran-US Conflict
By Dilakshan
ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்புப் பிரிவின் இரண்டு மூத்த உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை அன்று கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட இருவரையும் அயூப் ஹுசைன் யாகூப் மற்றும் யாசர் முஹம்மது முபாரக் என இராணுவம் அடையாளம் காட்டியுள்ளது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் யாகூப் கொல்லப்பட்டதாக டெலிகிராமில் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இரவு முழுவதும் தாக்குதல்
மேலும், தனது விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகள் தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது.

Image Credit: NPR
அத்தோடு, ஆயுதக் கிடங்குகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்