உலகளாவிய ஆதரவை இழந்து வரும் இஸ்ரேல்! நெதன்யாகுவிற்கு ஆலோசனை வழங்கும் ஜோ பைடன்
காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
“காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும்.
இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார்.
இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.