ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலிய உளவாளி: நிறைவேற்றப்பட்ட கடும் தண்டனை
இஸ்ரேல் (Israel) உளவாளி ஒருவருக்கு ஈரானில் (Iran) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சென் லங்கார்நெஷின் என்பவருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாக செயற்பட்டு வந்துள்ளார்.
இராணுவ அதிகாரி
இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரானின் இராணுவ அதிகாரி கலோனெல் ஹசன் சையத் என்பவரின் படுகொலைக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சென் லங்கார்நெஷி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையானது இன்று (30) நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த நபர், கடந்த 2020 ஆம் ஆண்டு மொஸாத் அமைப்பினால் பணியில் சேர்க்கப்பட்டதாகவும், நேபாளம் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய புலனாய்வுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரியான கலோனெல் ஹசன் சையத் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமையானது அந்நாட்டில் மிகப் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
