காசா மீதான இஸ்ரேலின் தீவிர தாக்குதல்: அதிரடி எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு
காசாவில்(Gaza) இஸ்ரேல்(Israel) நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு( Benjamin Netanyahu) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இஸ்ரேலியப்(IDF) படைகள் காசா மீது நேற்று(18) நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 660க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகப் பாலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியாகிய பல உயிர்கள்
கடந்த ஜனவரி மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் காசா மற்றும் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு இரு தரப்பும் பணய கைதிகளை விடுவித்து வந்தன.
அதன்படி, இன்னும் சில நாள்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், இஸ்ரேல் நேற்று(18) காசா மீது நடத்திய தாக்குதலில் பல உயிர்கள் பலியாகின.
பிரதமர் நெதன்யாகு
இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்து பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,"கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும்” என்று நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்