ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்
ஈரானுடனான போரைத் தொடர்வதற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்நாட்டின் பொது பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் இயால் ஜமீர் கூறியதாவது:
"நாம் பாதையின் நடுப்பகுதியில் இருக்கிறோம், ஆனால் திசை தெளிவாக உள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய விரிவான தாக்குதல்கள் ஈரானை பலவீனப்படுத்தியுள்ளன.
ஈரான் மீது தாக்குதல்
இனி அடக்குமுறை கிடையாது.! முன்னெடுப்புதான் வழி. தாக்குதலே வழி.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் மோதலின் சமீபத்திய கட்டத்தைத் தொடங்கின” என தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அமெரிக்க - பிரித்தானியா டியாகோ கார்சியா தளத்தைக் குறிவைத்துத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள், ஐரோப்பியத் தலைநகரங்களையும் சென்றடையக்கூடும் என்று இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |