தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: ஒரே வீட்டில் சிக்கியுள்ள 90 பேர்
தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக பலஸ்தீன குடும்பம் ஒன்று ஒரே வீட்டில் 90 பேருடன் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.
மீதமிருக்கும் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு இடம்பெயரும் நிலையில் இதுவரையில் 600,000 மக்கள் இடம் பெயர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவத்தினால்
காஸாவில் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் என்ற தேவைக்கே கஸ்டப்படுகின்றனர்.
இந்நிலையில் தெற்கே கான் யூனிஸ் பகுதியை சேர்ந்த பலஸ்தீன குடும்பம் ஒன்று உறவினர்கள், நண்பர்கள் என 90 பேருடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் உள்ள இப்ராஹிம் என்றவர் "தங்கள் குடும்பத்தினர் எவரையும் கைவிட தயாரில்லை" கூறியுள்ளார்.
இவ்வாறு ஒரே வீட்டில் அதிகமானோர் இருப்பதால் தூங்குவதக்கு கூட கடினமாக இருப்பதாகவும், ஒரு படுக்கையில் இருவர் என ஷிப்ட் முறைப்படி தூங்குவதாகவும், தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகள்
காலையில் எழுந்து இரவு தூக்கம் வரையிலும் உயிர் தப்பிக்க வேண்டுமென்றே நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய தேவைகள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு அருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருந்தாலும் சிறுவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீட்டில் கர்ப்பிணி பெண்ணொருவரும் நீரிழிவு நோயாளர் ஒருவரும் இருப்பதாகவும் அவர்களின் அவசரத்தேவைக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.