மோசடி நடந்தது உண்மையே - பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் அமைச்சர்
sajith premadasa
fraud
bandula gunawadena
By Sumithiran
சதொசவில் வெள்ளைப் பூண்டு மோசடி நடந்ததை ஒப்புக் கொள்வதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிறுவனத்தில் இதுபோன்ற மோசடிகள் நடப்பது இது முதல் அல்லது கடைசி முறை அல்ல என்று கூறிய அவர், கடந்த காலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடந்ததாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.