தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் !
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் இடம்பெறவுள்ளது.
இதன்படி, கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11/04/2025) அன்று பிற்பகல் மூன்று மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடாத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்கள்
இந்தநிலையில், ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிறிநேசன் மற்றும் வைத்தியர் சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ள மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று தொகுதி கிளை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்