தமிழரசுக்கட்சியிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் : சாடும் கஜேந்திரகுமார்
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் முறித்துக் கொண்ட தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பிற்கு கடிதம் எழுதியுள்ளமை அவர்களது நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடிதம் எழுதப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
யாழ் - கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று (24) கஜேந்திரகுமார் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
பேச்சுக்களை முறித்த சுமந்திரன்
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும். தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.
தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேச முனைந்துவருகிறோம். சுமந்திரன் இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார். நாடாளுமன்ற குழுவைத் தாண்டி கட்சியுடன் பேச நாம் முனைந்தோம்.
தமிழரசு சி.வி.கே சிவஞானத்தை சந்தித்தபோது அவர் ஏக்கியராஜ்யவை நாம் நிராகரித்துள்ளோம் என்று அறிவித்தார். இதன் பின்னர் சுமந்திரன் அவசரமாக செயலாளராக வந்தார். இந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.
அரசின் நிகழ்ச்சி நிரல்
தமிழ்த் தேசிய தரப்பு ஒன்று கூடி பெரும்பான்மையைக் காட்டி ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். சுவிஸ் அரசின் சந்திப்பின் போது கலந்து கொண்ட சத்தியலிங்கத்திற்கும் தெரியும்.
தேசிய மக்கள் சக்தியின் நிகால் அமரசிங்க அரசியலமைப்பை ஏக்கியராட்சி அரசியலமைப்பை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது. தமிழரசுக்கட்சி கடிதம் எழுதுகிறார்கள். தாம் தனிய பேச்சு நடத்த காலம் தருமாறு கோரியிருந்தனர்.
சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும் வேறுபாடு கிடையாது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில்தான் எதிர்ப்பு.
ஏக்கியராட்சியவை எதிர்க்க வேண்டும் 13ஐ பேசி மக்களை திசை திருப்ப வேண்டாம். ஏக்கிய ராட்சித்துக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். இது தேற்கடிக்கப்பட வேண்டும். தமிழரசுக்கும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தலைமைத்துவ பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
