தமிழரசுக் கட்சி எம்.பி அநுர அரசிடம் முன்வைத்த கோரிக்கை
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன்(Shanmugam Kugathasan) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(18.03.2025) பாதீட்டு விவாதத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ விவசாய உற்பத்திகளை முதன்மையாக கொண்ட நாடுகள் குறை அபிவிருத்தி கொண்ட நாடுகளாக மாறிவிட்டன.
கைத்தொழில் துறை
எனவே நாமும் கைத்தொழில் துறையினை முதன்மையாக கொண்ட நாடாக மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
இந்தச் சூழலில், இந்த அரசால் முன்வைக்கப் பட்டுள்ள பாதீட்டில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு மீண்டெழும் செலவுக்காக 4.8 பில்லியன் ரூபாவும் மூலதன செலவுக்காக 8.6 பில்லியன் ரூபாவும் மொத்தமாக 13.4 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 3.9பில்லியன் ரூபா அதிகமாகும். இது வரவேற்கத்தக்கது.
எனினும், இந்த ஒதுக்கம் கைத்தொழில் துறையினை மேம்படுத்த வேண்டும் என நினைக்கின்ற நாட்டுக்கு போதுமானதல்ல.
கந்தளாய் சீனி ஆலை
எடுத்துக்காட்டாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் சீனி ஆலையானது மோசமாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனை மறுசீரமைக்க 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை பத்து மடங்காக அதிகரித்தால் கூட அதனை மீள செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே இதற்கான ஒதுக்கீடு பன்மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்