வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி
Vavuniya
Ilankai Tamil Arasu Kachchi
Local government Election
ITAK
By Thulsi
வவுனியா (Vavuniya) மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தமிழரசுக் கட்சி இன்று (14.03.2025) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்