ராஜபக்சாக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சிங்கள மக்கள்
srilanka
mahinda
protest
italy
peoples
By S P Thas
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த நாட்டில் உள்ள இலங்கை சிங்களவர்கள் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷக்கள் அல்லது இலங்கைத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், தமிழ் டயஸ்போராக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி, இன்று ராஜபக்ஷர்கள் வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இத்தாலியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தற்போதை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,