தனது காதலனை பிரிந்தார் இத்தாலி பிரதமர் - 10 ஆண்டுகால தேன் நிலவு முடிவிற்கு வந்தது
தனது பத்து ஆண்டுகால காதல் வாழ்க்கைக்கு முடிவு கட்டியுள்ளார் இத்தாலியின் பெண் பிரதமரான 46 வயதாகும் ஜோர்ஜியா மெலோனி.
இத்தாலி நாட்டின் முதல் பெண்பிரதமரான இவர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆன்ட்ரியா ஜாம்புருனோ என்ற தொலைக்காட்சி பத்திரிகையாளரை காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
7 ஆண்டுகள் திருமணம் முடிக்காமல்
அதற்கு முன்னரும் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் திருமணம் முடிக்காமல் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
உறவு முறிந்ததற்கு காதலர் ஆன்ட்ரியா ஜாம்புருனோவின் தவறான செயல்களே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாட்களுககு முன்பாக அவருடைய நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் ஜாம்புருனோ தகாத வார்த்தைகளால் தனது சக பெண் ஊழியரை பேசுகிறார். மேலும் அவரிடம் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு அத்துமீறுகிறார்.
காதலனால் பிரதமர் மெலோனிக்கு நெருக்கடி
இந்த காணொளி நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி பிரதமர் மெலோனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னரே இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், காதலனின் காணொளியும் நெருக்கடியை கொடுத்ததால் இத்தாலி பிரதமர் மேற்கண்ட முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.