சமூக செயற்பாட்டாளர்கள் மீது சிஐடி விசாரணை: சிறீதரன் எம்பி கண்டனம்

S Shritharan ITAK
By Raghav Jun 09, 2024 03:26 PM GMT
Report

பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரை களமிறக்கி தமிழ் மக்கள் வாழ்வை சிதைக்க வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்புபிரிவினர் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் (S. Siritharan) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் ஜுன் 4ஆம் திகதி தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கருப்பையா ஜெயக்குமார் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி (Kilinochchi ) அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி. கிளிநொச்சி மாவட்டக்கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார். கடந்த பெப்பரவரி 14 மற்றும் மே 31ஆம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மது போதையில் இளைஞனை மோதி தப்பிச் சென்ற வைத்தியர்: காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை

மது போதையில் இளைஞனை மோதி தப்பிச் சென்ற வைத்தியர்: காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை

பயங்கரவாதம் 

மற்றும் கரைச்சிப் (Karachchi ) பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி பயங்கரவாத மற்றும் புலனாய்வுப்பிரிவின் கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

சமூக செயற்பாட்டாளர்கள் மீது சிஐடி விசாரணை: சிறீதரன் எம்பி கண்டனம் | Itd Investigate Activists Sritharan Mp Condom

எழுத்தாளரும் ஆசிரியரும், தீபச்செல்வன் என அறியப்படுபவருமான பாலேந்திரம் பிரதிபன் ஏப்ரல் 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

பூநகரிப் (Pooneryn) பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்பு மற்றும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் நபர் கைது

யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் நபர் கைது

வெலிக்கடை சிறை

கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஏப்ரல் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

 சமூக செயற்பாட்டாளர்கள் மீது சிஐடி விசாரணை: சிறீதரன் எம்பி கண்டனம் | Itd Investigate Activists Sritharan Mp Condom

பூநகரி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயச்சித்ரா தயானந்தன் மே 27ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவின் கொழும்பில் (Colombo)  அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச்மாதம் 26 ஆம் திகதி அன்று வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு (சிஐடி) அழைக்கப்பட்ட தன் பின்னர் கைது செய்யப்பட்டு தற்போது அவர் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தீ பிடித்த விமானம்: கனடாவில் பரபரப்பு

பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தீ பிடித்த விமானம்: கனடாவில் பரபரப்பு

அரசியல் செயற்பாடுகள்

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த எஸ். சுதாகரன் இவ்வாறான கைதுகள் மற்றும் பயங்கரவாத விசாரணைகளை நிறுத்துமாறு வடக்கில் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிரான அடக்கு முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளர்கள் மீது சிஐடி விசாரணை: சிறீதரன் எம்பி கண்டனம் | Itd Investigate Activists Sritharan Mp Condom

'வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியதளத்தில் இயங்கும் பல ஆர்வலர்களின் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளை முடக்கி அவர்களை அச்சுறுத்தும் வகையிலான விசாரணைகளும், கைதுகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை சமகாலத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் உங்கள் அவதானத்தை செலுத்துமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும்  தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…

கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…

தமிழர் பகுதியில் பறிபோயுள்ள விவசாய நிலங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

தமிழர் பகுதியில் பறிபோயுள்ள விவசாய நிலங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026