தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள்! யாழில் சம்பவம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Laksi
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(23) காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
நான்கரை பவுண் தாலி மீட்பு
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நிமிடம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்