யாழில் சரமாரியான வாள்வெட்டு -தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
arrest
police
jaffna
sword
By Sumithiran
யாழில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
"கோப்பாய், யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.
காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் கூறினர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி