யாழில் முககவசம் அணியாதோரை அள்ளிச்சென்ற பொலிஸார் - படங்கள் இணைப்பு
covid
arrest
police
jaffna
By Vanan
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முககவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ். நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,
யாழ். நகர்ப்பகுதியில் முககவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்