பயணத் தடையை மீறி அதிகளவானோரை ஒன்று திரட்டி பண உதவி- பொலிஸாரின் நடவடிக்கை!
police
jaffna
quarentine
nelliyady
vathiri
By Kalaimathy
கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் நூற்றுக் கணக்கானோர் வரிசையில் திரண்டனர். சம்பவம் தொடர்பில் அறிந்த நெல்லியடிப் பொலிஸார், அங்கு சென்று பண உதவி வழங்கியவர் உட்பட மூவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.





