புதிய அரசியல்யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை- நாடு தழுவிய ரீதியில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

srilanka jaffna maravanpulo
By Vasanth Apr 10, 2021 08:53 AM GMT
Report

அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை கோரி நாடு பூராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு சச்சிதானந்தம் ஏற்பாட்டிலேயே இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் மாலை வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மத மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள்.

அத்தோடு சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும், இல்லாவிட்டால் இரண்டு மதங்களும் மதமாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும்.

குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதமாற்றிகளின் செயற்பாடு அதிகரித்து காணப்படுகின்றது.

அதேபோல் இந்து மக்கள் பசுவினை கோமாதா என வணங்குகின்றோம். ஆனால் இங்கே மாடுகளை வெட்டி உண்கிறார்கள் அதனையும் நிறுத்த கோருகின்றோம்.

அதாவது பாலைவனங்களில் தான் மாடுகளை அறுத்து உண்பார்கள். ஆனால் இலங்கை ஒரு சோலைவனம் இங்கே மாடுகளை கோமாதாவாக வணங்கி அவைகளைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே இலங்கையில் மாடுகள் வெட்டுவதை நிறுத்த வேண்டுமெனவும் கோரி இன்றைய தினம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி