செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம்

Tamils Jaffna Law and Order chemmani mass graves jaffna
By Theepan Apr 08, 2026 06:35 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பிலான சாத்தியங்களை தீர்மானிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி குறித்த வழக்கு அழைக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நடைபெற்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இடம்பெற்ற போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான வேலைகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்த நிலையிலும் ஏற்கனவே பெப்ரவரி 12ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இருந்து நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாதீடானது இன்றுவரை அனுமதி வழங்காத நிலையில் காணப்படுவது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 

கடந்த தவணையின் போது அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி என உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய திகதியில் ஆரம்பிக்க முடியாத சூழல் இருப்பதாக நீதிமன்றத்தினுடைய அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம் | Jaffna Chemmani Mass Grave Excavation Of 3Rd Phase

அடுத்த கட்ட அகழ்வு பணி கிட்டத்தட்ட 27ஆம் திதி தற்காலிகமாக ஆரம்பிக்கப்படலாம் என்ற கலந்தாலோசனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோடு அது தொடர்பான விடயத்திற்கு பாதீடு தயார் நிலையில் உள்ளதா இல்லையா என்பதை ஆராய மீண்டும் வழக்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குறித்த புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதியை கேட்டிருந்த நிலையில், அவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக அல்லது மாலை இரண்டு மணிக்கு பின்னராக குறித்த புதைகுழியை தரிசனம் செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

நிச்சயமாக எந்த நேரத்தில் அவர்கள் விஜயம் செய்ய உள்ளார்கள் என்ற விடயத்தை முற்கூட்டியே நீதிமன்றத்தில் அறிவிக்கும் படியும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

விவசாயிகளுக்கான உர மானியம் அதிகரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

விவசாயிகளுக்கான உர மானியம் அதிகரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

விசாரணைகளின் போது கலந்துகொண்டோர் 

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புகளை ஆய்வு செய்வதற்கான பாதீடும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீடும் இரண்டும் ஒரேயடியாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் : எடுக்கப்படவுள்ள தீர்மானம் | Jaffna Chemmani Mass Grave Excavation Of 3Rd Phase

இரண்டுக்குமே அனுமதி இன்னும் அளிக்கப்படாத நிலைமையில் இருக்கிறது என்றும் அதில் மனித எலும்புகளின் ஆய்வுக்கான பாதீட்டில் சிறிய திருத்தம் செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இரண்டையும் சேர்த்து அனுமதி வழங்க வேண்டி சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்” என தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணைகளின்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, காணாமல் போனார் பற்றிய அலுவலக சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் போனார் பற்றிய அலுவலக பிரதிநிதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், காவல்துறையினர், முறைப்பாட்டாளர்கள், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016