யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்
covid
jaffna
people
By Vanan
யாழில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலைய சாரதி நடத்துனர்களுடன் உரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் பேருந்துகளில் ஆசன அளவிற்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர், பேருந்துகளில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்